
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பன்னண்டு சதவீதம் வரை பிடித்தம் செய்து வருகின்றது. இந்த EPF தொகையை ஊழியர் மருத்துவ செலவு, கல்வி மற்றும் திருமணம் உள்ளிட்ட பல காரணங்களினால் பாதியிலேயே பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் திருமணத்திற்காக இந்த தொகையை பெற விரும்பினால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருந்த பின்னர் EPF உறுப்பினரின் திருமணம், மகன் மகள் மற்றும் சகோதரர் அல்லது சகோதரியின் திருமணத்திற்காக இந்த தொகையை பெற முடியும். இதற்கு முதலில் EPF உறுப்பினர் படிவத்தை நிரப்பி முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு முதலாளி மூலமாக ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் உறுப்பினரின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.