
பிரிட்டனில் வசித்த இந்திய பெண் ஹர்ஷிதா பிரெல்லா (24) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஹர்ஷிதா, பங்கஜ் லம்பா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் பிறகு தொடர்ந்து கணவர், மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் பங்கஜ் ஹர்ஷிதாவை டார்ச்சர் செய்துள்ளார். கடந்த நவம்பர் 10ம் தேதி ஹர்ஷிதாவை அவரது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
ஹர்ஷிதா, கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவரது தந்தை சத்பீர் சிங்கிற்கு போன் மூலம் தொடர்புகொண்டு தன்னை தனது கணவர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தற்போது அவரிடம் இருந்து தப்பித்து ஓடுகிறேன் என கூறியுள்ளார். அதோடு உதவிக்கு ஒரு வேலைக்காரரை அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் பங்கஜ், ஹர்ஷிதாவை தெருவில் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்ததார். மேலும் கடந்த சில மாதங்களாகவே அவர் மன உளைச்சலால் தொடர்ந்து தன்னை பாதுகாக்க குடும்பத்திடம் சென்று அழுது புலம்பியதாகவும் கூறப்படுகிறது.
பங்கஜ் மீது முன்பே ஹர்ஷிதா போலீசில் புகார் அளித்திருந்ததால், சட்டப்படி இந்தியாவுக்கு திரும்ப முடியாது என ஹர்ஷிதா தனது குடும்பத்திடம் கூறியிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். ஹர்ஷிதாவின் அக்கா சோனியா, “அவள் ஒரு குழந்தை போல இனிமையாவள். யாருக்கும் கெடுதல் செய்யமாட்டாள். எல்லோருக்கும் நல்லது நடந்தால் நமக்கும் நடக்கும் என நம்புவாள்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த கொலை சம்பவம் கடந்த வருடம் நடந்த நிலையில், தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த விசாரணையைத் தாமதிக்காமல் மேற்கொள்ள, வெளிநாட்டு அமைச்சகம் யுகே அதிகாரிகளுடன் இணைந்து பணிபுரிவதற்காக ஒரு ஒப்பந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹர்ஷிதாவின் குடும்பம் “பங்கஜ்க்கு மிகக்கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.