செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி குமார் (48) மற்றும் அவரது மனைவி மகாராணி (35) இருவரும் துாக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குமார், அவரது முதல் மனைவி இறந்த பின் மகாராணியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு முதல் மனைவியால் இரண்டு மகன்களும், மகாராணியால் இரண்டு மகள்களும் உள்ளனர். குமாரின் மனைவியான மகாராணிக்கும் அப்பகுதியில் வசிக்கும் ஆசிரியர் செந்திலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. செந்திலுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த பின்னரும் இந்த தொடர்பு நீடித்துள்ளது.

இதை ஐந்த செந்திலின் மனைவி இதை அவரது குடும்பத்தினரிடம் கூறியதால், செந்தில் குடும்பத்தினர் குமாரையும் மகாராணியையும் திட்டி தாக்கினர். இதனால் மன உளைச்சலில் இருந்த குமாரும் மகாராணியும் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் மற்றும் மகாராணியின் உடல்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து, கள்ளத்தொடர்பு காரணமாக இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா என்பதை கண்டறியும் வகையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.