ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை ஆன்லைன் மூலம் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில் திருப்பதியில் அக்டோபர் மாதம் சாமி தரிசனம் மேற்கொள்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. அறை ஒதுக்கீட்டிற்கான புக்கிங் மாலை 3 மணி அளவில் வெளியாகிறது. டிக்கெட் முன்பதிவுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 20000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.