திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் வாயிலாக லட்டு பிரசாதம் வாங்குவது, தங்கும் அறைகளை பெறுவது போன்றவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்து உள்ளனர் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த தொழில்நுட்பத்தை வருகிற மார்ச் 1ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். திருப்பதிக்கு வரும் பக்தர் ஒருவர் அதிகமான டோக்கன்கள் வாங்குவதை தடுப்பதற்காக புது தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.