தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருடைய இடத்தை தற்போது த்ரிஷா பிடித்துவிட்டார். அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை திரிஷா தான். படம் ஒன்றுக்கு 12 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதனால் திரிஷா ,நயன்தாரா ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதி கொள்கிறார்கள். இந்த நிலையில் திரிஷா, ஸ்ரேயா குறித்து முன்பு ஒரு பேட்டியில் நயன்தாரா கூறிய விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நீங்கள் த்ரிஷா, ஸ்ரேயா எல்லாம் நல்ல ஃபிரண்ட்ஸ். பேப்பர்ல எல்லாம் வருது என்று பேட்டி எடுத்தவர் கேட்க ,நயன்தாரா பிரண்ட்ஸ் எல்லாம் கிடையாது.

பிரண்ட்ஸ் என்பது பெரிய வார்த்தை. அதை அவர்களுக்காக யூஸ் பண்ண முடியாது. அது எப்பவுமே இருக்கும் ஹீரோயின்ஸுக்கு ஆகவே ஆகாதுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி தான் .அது எனக்கு கிடையாது. எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. மத்தவங்களுக்கு இருக்கலாம் .நான் கண்டுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா ஏன் இப்படி பேசி இருக்கிறார்? அது சரி உண்மையை சொல்லி இருக்கிறார் தப்பில்லை என்று கூறுகிறார்கள்.