
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வரும் நிலையில் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டிற்கு உள்ளே ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் நுழையும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட அதை பலரும் ட்ரோல் செய்து வந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஃபேன் பேஜ் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றிலேயே அதை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்று எடிட் செய்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், விஜய் அவர்களின் வசீகரா படத்தில் வடிவேலு அவர்களை தள்ளிவிட்டு தியேட்டர் நினைப்பில் உள்ளே வந்து விட்டேன் என அமைக்கப்பட்டு இருக்கும் காமெடி காட்சி ஒன்று தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்குள் நுழையும் ரசிகர்கள் தொண்டர்கள் பொதுமக்களின் வீடியோவுடன் ஒப்பிட்டு கலாய்த்து வெளியிடப்பட்டு அது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
View this post on Instagram