தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்தே பல இடங்களில் அதிருப்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தாம்பரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நேற்று (மார்ச் 28) தாம்பரத்தில் உள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள், இப்போது ஒருபடி மேலே போய் சென்னை அண்ணா அறிவாலயத்தையே முற்றுகையிட்டுள்ளனர். “எங்க அண்ணனுக்கு சீட் இல்லையா? அப்புறம் யாருக்குமே இங்க வேலையில்ல!” என கோஷமிட்டு வருவதால் அறிவாலய வளாகமே போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது.
கடந்த 2021 தேர்தலில் அமோக வெற்றி பெற்ற எஸ்.ஆர்.ராஜாவுக்கு ஏன் சீட் கொடுக்கவில்லை என்ற கேள்வியுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் மாற்றத்தைக் கண்டித்து முக்கிய நிர்வாகிகள் சிலர் ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளதால், தாம்பரம் திமுகவுக்குள் ஒரு பெரிய விரிசல் விழுந்துள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “என்னப்பா இது… எலக்ஷன் நேரத்துல சொந்தக் கட்சிக்குள்ளயே இப்படி ஒரு குஸ்தி நடக்குதே!” என சமூக வலைதளங்களில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் அண்ணா சாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, திமுக தலைமை இந்த விவகாரத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்
