
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொடை விவகாரத்தில் திமுக மீது திருமாவளவன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரை அதிமுக கூட்டணியில் கொண்டு வரும் முயற்சியை ஈபிஎஸ் தொடங்கி இருப்பதாகவும் சில தலித் சமூக தலைவர்கள் மூலம் அவருடன் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் ஆறு பொது தொகுதிகள் உட்பட 13 தொகுதிகள் தருவதாக இபிஎஸ் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.