
திமுக மாநாட்டில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவின் பெயரில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் இன்று நடைபெற உள்ளது. மாநாட்டு நுழைவாயிலில் அண்ணா, பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ள நிலையில், நுழைவாயிலில் அனிதா புகைப்படம் இடம்பெற்றுள்ளது