
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று கூறி வருகிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும் நிலையில் சமீப காலமாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது நாடாளுமன்ற எம்பி சீட் தங்களுக்கு வழங்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் அப்படி எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று கைவிரித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவுக்கு எம்பி சீட் மறுத்ததால் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் அதனை விமர்சித்து வருகிறது.
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் பட்ஜெட்டை வரவேற்பதாக கூறினார். இந்நிலையில் சென்னையில் இராணி கொள்ளையர்களில் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அதனை வரவேற்பதாக தற்போது பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சமீப காலமாக திமுகவுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் பேசுவதோடு அவர்களை பாராட்டியும் வருகிறார். ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக மீது தேமுதிக கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டை மாற்றலாம் என்று கூறப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளுக்கு கூட முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லி இருந்தார். மேலும் இதன் காரணமாக தேமுதிக திமுக கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது.