
விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் சிறப்பாக நடந்து முடிந்தது. விஜய் தனது கட்சி கொள்கைகள் பற்றி விரிவாக பேசினார் மேலும் திமுகவையும் பாஜக கட்சியையும் நேரடியாக விமர்சித்து பேசினார். தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் ஒரு குடும்பம். சுயநல கூட்டம் தான் நமது அடுத்த எதிரி என கூறினார். மேலும் பத்தோடு பதினொன்றாக எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக வரவில்லை. என்னோட டார்கெட் வேற. ஒரு முடிவோடு தான் வந்து இருக்கேன். இனி வந்த பாதையை திரும்பி எல்லாம் பார்க்க மாட்டேன்.
சமூக வலைதளங்களில் கம்பு சுத்த வந்த கூட்டம் கிடையாது. நாங்க மக்களின் உரிமைக்காக அரசியல் வாள் ஏந்தி நிற்கும் கூட்டம். 2026 தேர்தல் போருக்கான நாளை குறிக்கும். அந்த நாளில் மக்கள் தமிழக வெற்றி கழக சின்னத்துக்காக வாக்களிப்பார்கள். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறாங்க. இனி எவ்வளவு மோடி மஸ்தான் வேலை செஞ்சாலும் வேலைக்கு ஆகாது என பேசினார். இது பற்றி துணை முதல்வர் ஸ்டாலின் இடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, விஜய் பேசியதை நான் இன்னும் கேட்கவில்லை. விஜய் பேசியதை கேட்டு விட்டு நான் பதில் கூறுகிறேன். விஜய்யின் முழு பேச்சை கேட்ட பிறகு தான் என்னால் பேச முடியும் என கூறியுள்ளார்.