சென்னையில் நேற்று பாஜக கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தலை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தொகுதி மறு வரையறை குறித்து இதுவரை மத்திய அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தினம் தினம் அதைப் பற்றி திமுக அரசு பேசுகிறது.

அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலை நினைத்து இப்போதே பயம் வந்துவிட்டது. மக்களுக்காக தொண்டாற்றும் கட்சியாக பாஜக இருக்கும் நிலையில், திமுகவுக்கு மக்கள் நலனை பற்றி எந்தவிதமான கவலையும் அக்கறையும் இல்லை. மேலும் உதயநிதிக்கு துதி பாடும் கோயில்களாக அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.