
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அவரிடம் கோவை ஏர்போட்டில் வைத்து பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதால் கூட்டணி தொடர்பாக எதுவும் பேச்சுவார்த்தை நடக்கப் போகிறதா என்று கேட்டனர். அதற்கு ஆவர் அரசியலில் கொள்கை கோட்பாடு போன்றவைகள் மாறலாம். ஆனால் மனித உறவுகள் என்றென்றும் மாறாது. நான் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக தற்போது செல்கிறேன் என்றார்.
அதன் பிறகு திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்ன கருத்துக்கு சீமான் வரவேற்பு கொடுத்த நிலையில் அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக நிற்கட்டும் நான் மட்டும் தனித்து அதற்கு ஆதரவு கொடுக்கிறேன் என்றார். எப்படி தனித்து நின்று ஜெயிக்க முடியும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என்று கேட்கிறீர்களே தவிர கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என்று யாரும் கேட்பதில்லைஎன்றார். மேலும் எப்போதும் நான் யாரிடமும் கூட்டணி வைக்க மாட்டேன் தனித்து மட்டும்தான் என்று போட்டியிடுவேன் என்றார்.