
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நடைபெற்ற வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 55 வருடங்களாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதே வன்னியர்களுக்கு அரசு செய்யும் துரோகம் தான். அப்படி நாங்கள் உங்களுக்கு என்ன கேடு செய்துவிட்டோம். திமுகவுக்கு 55 வருடங்களுக்கு முன்பாக வன்னியர் இனவெறி தொடங்கிய நிலையில் 45 வருடங்களாக அதற்காக நான் பாடுபடுகிறேன். ஆனால் இந்த முறை வன்னியர் இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
திமுகவை வளர்த்ததே வன்னியர்கள் தான். திமுகவுக்கு ஓட்டு போட்டு ஓட்டுக்காக உழைத்தவர்கள் வன்னியர்கள். நீங்கள் முதல்வர் உங்களுடைய மகன் துணை முதல்வர். ஆனால் மூத்த தலைவர் துரைமுருகன் கட்சிக்காக உழைத்து பலமுறை ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர். அவருக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி வழங்கக்கூடாது. வேறு வழியில்லாமல் துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவியை திமுக வழங்கியுள்ளது என்றார். துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவியை தரக்கூடாது. அந்த மனசு திமுகவுக்கு வராது. மேலும் இதற்கான காரணம் அவர் பாவப்பட்ட வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதனால்தான் துணை முதல்வர் பதவியை வழங்கவில்லை என்று கூறினார்.