திமுகவை எதிர்கொள்ள முடியாமல் இபிஎஸ் ஓடுகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் திமுகவை எதிர்கொள்ளமுடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் எடப்பாடியை தமிழக மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

அராஜகத்திற்கும் அத்துமீறல்களுக்கும் அடையாளமாகிப் போன திமுகவிற்கும், மக்களை சந்திக்கமுடியாமல் தேர்தலை புறக்கணித்து புறமுதுகிட்டு ஓடும் எடப்பாடிக்கு தகுந்த பாடம் புகட்டும் விதமாக பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.