
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து இன்று காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் காலை உணவு திட்டமும் இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி திட்டத்தின் பெயரை மாற்றி தான் காலை உணவு திட்டம் என்று வைத்துள்ளனர். மேலும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அதில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு கல்விக் கொள்கை என திமுக வெளியிட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.