இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான jio தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அடிக்கடி புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தினசரி 2.5gb டேட்டாவுடன் வாடிக்கையாளர்களுக்கு 3 ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி போன்ற சேவைகளும் கிடைக்கும்.

அதன் பிறகு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2.5 gb டேட்டா பெற 3599 ப்ரீபெய்டு திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இதே போன்று  365 நாட்கள் வேலிடியுடன் 3999 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டமும் இருக்கிறது. இவைகளிலும் அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற பல்வேறு சேவைகள் கிடைக்கும்.