சமீபகாலமாக விவாகரத்து ஆனதை கொண்டாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதாவது கணவனிடமிருந்து மனைவி விவாகரத்து பெற்ற பிறகு அந்த கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்தை விமர்சையாக கொண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விவாகரத்தை கொண்டாடும் நிலையில் சமீபத்தில் ஒருவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை அவரைப் போன்ற ஒரு உருவ பொம்மையை வைத்து கொண்டாடினார். இந்நிலையில் தற்போது ஒரு பெண் விவாகரத்து ஆனதை மெஹந்தி வரைந்து கொண்டாடியுள்ளார்.

அதாவது ஆசை ஆசையாக திருமணம் செய்து கொள்ளும்போது சில நேரங்களில் அந்த திருமணங்கள்  நினைத்த மாதிரி அமைவதில்லை. வாழ்க்கையில் விரிசல்கள் மனக்கசப்புகள் போன்றவை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறது. மேலும் இந்த நிலையில் பெண் ஒருவர் தனக்கு விவாகரத்து ஆனதை மெஹந்தி மூலம் கொண்டாடிய நிலையில் அவருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் இணையதளத்தில் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் பேசும் பொருளாக மாறி உள்ளது.