திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு கூடுதல் ரயில்களை இயக்கும் வகையில் 73 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷன் வழியாக தினம் தோறும் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கிறது. குறிப்பாக திண்டுக்கல் மற்றும் கரூர் இடையே தினம்தோறும் எட்டு ரயில்கள் இயக்கப்படுவதால் திண்டுக்கல் மற்றும் கரூர் இடையே ஒரு வழிப்பாதை இருப்பதால் ரயில்கள் கிராசிங்குகாக வழியில் நிறுத்தப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைத்தால் கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கும் பயண நேரத்தை குறைக்கவும் முறையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை ஏற்று ரயில்வே நிர்வாகம் தற்போது திண்டுக்கல் மற்றும் கரூர் இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.