தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக-விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும், தனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தியடைந்த சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன், இன்று (ஏப்ரல் 3) அமமுக-விலிருந்து விலகி அதிரடியாக திமுகவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக-வில் இணைத்துக்கொண்ட பார்த்திபனுக்கு, முதல்வர் சால்வை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தார். தேர்தல் நேரத்தில் வேலூர் மாவட்டத்தின் முக்கியத் தூணாகக் கருதப்படும் பார்த்திபன் திமுக-விற்குத் தாவியிருப்பது, அந்தப் பகுதியில் அதிமுக – அமமுக கூட்டணிக்குப் பின்னடைவாகவும், திமுக-விற்குப் பெரும் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
