டெல்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்க உள்ளதால் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் கடுமையாக உழைத்து வருகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கட்சிகள் கூட்டணிக்கான இறுதி கட்ட ஒப்பந்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் இந்த தேர்தலில் போட்டியிடும். காங்கிரஸ் உடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என கூறியுள்ளார். முன்னதாக டெல்லி சீலாம்பூர் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆக இருந்தவர் அப்துல் ரகுமான். இவர் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டி அப்துல் ரகுமான் அந்த கட்சியில் இருந்து விலகினார் .