தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு கரம் நீட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் மிக முக்கிய மூத்த நிர்வாகிகள் திடீரென திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வைகோவுடன் ‘போட்டா’ சட்டத்தின்கீழ் சிறைவாசம் அனுபவித்த தீவிர மதிமுக விசுவாசிகளான முன்னாள் நிர்வாகிகள் அழகுசுந்தரம், செவந்தியப்பன் மற்றும் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்டோர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
வைகோவின் தவெக ஆதரவு நிலைப்பாட்டால் அதிருப்தியடைந்தே இவர்கள் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த அதிரடித் தகவல் வைகோவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், கூட்டணி கணக்குகளைப் போட்டு வந்த நடிகர் விஜய்யின் தவெக தரப்பிற்கு பெரிய ஷாக் கொடுக்கும் வகையில் ஸ்டாலின் அடித்த மாஸ்டர் ஸ்ட்ரோக்காகப் பார்க்கப்படுகிறது.
