சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் கடந்த இரு தினங்களாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஏலத்தில் விடப்பட்டார். ஆனால் அவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. இந்நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ஆகாஷ் அம்பானி அர்ஜுன் ரெண்டுல்கரை வாங்கியுள்ளார்.

அதாவது மீண்டும் Unsold players ஏலத்தில் விடப்பட்டனர். அப்போது அவரின் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிக் கொண்டது. மேலும் அர்ஜுனை எப்படியும் மும்பை அணி கைவிடாது என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில் அதுபடியே தற்போது அவரை அந்த அணி வாங்கிவிட்டது.