இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா, சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவிலான அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

​38 வயதான கரண் சர்மா, தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் ‘யுபி டி20 லீக்’ தொடரில் தீவிரமாக விளையாடி வந்தார். இத்தொடர் பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த வேளையில், அவர் தனது திடீர் ஓய்வு முடிவை வெளியிட்டு ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

​தனது சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் தொடரில் பல்வேறு முக்கிய அணிகளுக்காக விளையாடியுள்ள இவர், மொத்தம் 90 போட்டிகளில் பங்கேற்று 83 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணிகளில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

​தனது ஓய்வு குறித்து பேசியுள்ள கரண் சர்மா, இனிவரும் காலங்களில் கிரிக்கெட் பயிற்சியாளராகப் (Coaching) புதிய அவதாரம் எடுத்துத் தனது அனுபவங்களை இளம் வீரர்களுக்குக் கற்றுத்த்தர விருப்பம் தெரிவித்துள்ளார். இவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு சோசியல் மீடியாவிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.