உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலந்த், தனது நீண்ட முடியை முற்றிலும் மாற்றி புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த அதிரடி மாற்றத்திற்கு, ஸ்வீடன் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் ஸ்லாட்டன் இப்ராஹிமோவிச் அளித்துள்ள கலகலப்பான கிண்டல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நார்வே நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரரான ஹாலந்த், நீண்ட முடியைக் கட்டிக்கொண்டு விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் புதிய பருவத்திற்குத் தயாராகும் வகையில், தனது நீண்ட முடியைக் குட்டையாக வெட்டி பஸ் கட் (Buzz Cut) தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
இந்த புதிய தோற்றத்தில் அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இதைப் பார்த்தவுடன் தனது பாணியில் வழக்கம் போல் சிரிப்புடன் கமெண்ட் செய்த இப்ராஹிமோவிச், “எதைச் செய்து தொலைத்தாய்? பந்தயத்தில் தோற்றுவிட்டாயா? ஓ மை காட்… என்னை பிளாக் செய்துவிட்டு, என் போன் நம்பரையும் அழித்துவிடு” என்று கிண்டலாகக் கூறினார்.
𝗛𝗔𝗔𝗟𝗔𝗡𝗗 𝗖𝗔𝗟𝗟𝗘𝗗 𝗣𝗘𝗣 𝗔𝗡𝗗 𝗭𝗟𝗔𝗧𝗔𝗡 𝗧𝗢 𝗦𝗛𝗢𝗪 𝗢𝗙𝗙 𝗛𝗜𝗦 𝗡𝗘𝗪 𝗛𝗔𝗜𝗥𝗖𝗨𝗧 😂
Pep: “You are lucky you have hair, I would love to have it” 😂👨🦲
Zlatan: “You’ve lost a bet or what? Oh my… Block me and erase my number” 😂 pic.twitter.com/LkxBKn1VBO
— 433 (@433) August 23, 2026
இந்த நகைச்சுவையான கிண்டலுக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான பின்னணி உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின்போது, ஹாலந்தும் இப்ராஹிமோவிச்சும் சந்தித்துக்கொண்டனர். அப்போது அவர்களின் பிரபல சிகை அலங்காரம் குறித்துப் பேசிய இப்ராஹிமோவிச், கால்பந்து வீரர்களின் அத்தனை சக்தியும் அவர்களின் நீண்ட முடியில்தான் இருக்கிறது என்று ஜாலியாகக் கூறியிருந்தார்.
தற்போது ஹாலந்த் தனது நீண்ட முடியை மொத்தமாக வெட்டிவிட்டதால், இப்ராஹிமோவிச் அவரை இப்படி ஜாலியாகச் சீண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய தோற்றத்திற்கு மாறியுள்ள ஹாலந்த், வழக்கம்போல தனது கோல் அடிக்கும் திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, தனது சக்தி முடிக்குத்தான் இருக்கிறதா அல்லது காலுக்கு இருக்கிறதா என்பதை நிரூபிக்கக் காத்திருக்கிறார்.
