
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக் கணக்கில் 9900 கோடி இருந்துள்ளது. இதனால் குழம்பிய விவசாயி சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விவரத்தை கூறியுள்ளார். பிறகு அவருடைய வங்கி கணக்கை சோதித்துப் பார்த்த அதிகாரிகள் உண்மையை அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து பிரகாஷ் வங்கி கணக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு நடந்து இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரகாஷின் வங்கி கணக்கு துரதிஷ்டவசமாக 9900 கோடி சென்றுள்ளதாகவும் அதனை விரைவில் சரி செய்வோம், அதுவரை அவருடைய வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என வங்கி கிளை மேலாளர் கூறியுள்ளார்.