
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சிக்கும் மற்றும் வியப்புக்கும் உள்ளாக்கியுள்ளது. இதில், ஒரு வீட்டின் சோபாவில் பதுங்கியிருந்த ஒரு நாகப்பாம்பு தலையணையின் உட்புறத்தில் ஒளிந்து கொண்டு இருந்தது. வீட்டிலிருந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து ஒரு வினோதமாக உஷ் உஷ் என சத்தம் கேட்டதால் சந்தேகப்பட்டு தலையணையை நகர்த்தினர்.
அப்போது பாம்பு ஒன்று பதுங்கியிருப்பது தெரியவர, உடனடியாக பாம்பு பிடிக்கும் நிபுணர்களை அழைத்தனர். அவர்கள் வந்து அதனை பாதுகாப்பாக வெளியே எடுத்து செல்லும் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.