
மத்திய பிரதேச மாநிலத்தில் பாந்தவ்நகர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு சிவம்பர்கையா என்பவர் தன்னுடைய வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த நாயையும் அழைத்துக் கொண்டு நடைபயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது திடீரென காட்டிலிருந்து ஒரு புலி வந்தது. இதைப் பார்த்த அந்த நாய் உடனடியாக குரைக்க தொடங்கியது. அது குரைத்து குரைத்தே தன்னுடைய உரிமையாளரிடம் புலி நெருங்க விடாமல் பாதுகாத்தது. இ
தனால் கோபத்தில் அந்த புலி நாய்மீது பாய்ந்தது. சிறிது நேரம் சண்டை நடந்த பிறகு அந்த புலி மீண்டும் காட்டுக்குள் சென்றது. இதில் நாய்க்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில்உடனடியாக அந்த உரிமையாளர் தன்னுடைய நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அது சில மணி நேரங்களில் உயிரிழந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உரிமையாளரை காக்க தன் உயிரையே விட்ட நாயின் செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.