வண்டலூரில் பைக் பஞ்சராகி பள்ளி மாணவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அவுட்டர் ரிங் ரோடு வரதராஜபுரம் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பைக்  ஒட்டிச் சென்றுள்ளனர். அப்போது பைக்கின் டயர் பஞ்சர் ஆகி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது.

இதில் பின்னால் அமர்ந்து சென்ற சூர்யா என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பைக்கை ஓட்டிய ஹர்ஷவர்தன்  படுகாயமடைந்தார். இதையடுத்து, 18 வயது நிரம்பாத சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்தது தொடர்பாக ஹர்ஷவர்தனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய  காவல்துறையினர் முடிவு எடுத்துள்ளனர்.