குஜராத் மாநிலம் வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயணன் குருகுல் என்ற பள்ளியின் முதல் தளத்திலிருந்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் பக்கவாட்டு சுவரானது நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின் பொழுது திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. வகுப்பறையில் இருந்து மாணவர்களின் அலறல் சட்டம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட அனைவரும் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்திலிருந்து மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மீது விழுந்துள்ளது.வகுப்பில் சுவர் இடிந்த பொழுது சுவரின் அருகில் இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.