இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்த குழந்தையை மேலிருந்து ஒருவர் பிடித்த நிலையில் அவரால் மீட்க முடியவில்லை.

 

இந்நிலையில் கீழே இருந்து ஒரு மனிதர் திடீரென ஸ்பைடர் மேன் போன்று எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மாடிமேல் மாடி ஏறி அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினார். அவர்  உயிரைக் கூட பொருட்படுத்தாமல் குழந்தையின் உயிரைக் காக்க பால்கனியின் கம்பிகளை பிடித்துக்கொண்டு ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு ஏறி சில வினாடிகளில் நான்காவது மாடியை அடைந்து குழந்தையை மீட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த ஸ்பைடர் மேன் மனிதனின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.