
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜோக்கோ நகரில் உணவகம் ஒன்றின் வெளியே, புதிதாக வாங்கிய கேபின் கார் ஒன்றின் உரிமையாளர், தனது வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், அந்த காரை இயக்க வந்த ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தானாக புறப்பட்டு உணவகத்திற்குள் சென்றது. அதில், உணவக உரிமையாளர் மகளை நோக்கி நேராக நகர்ந்த காரை கண்டு, அங்கிருந்த 11 வயது சிறுமி, தனது தங்கையை விரைந்து தூக்கி சென்றார்.
सिर्फ 5 सेकंड और बच्चे की जान बच गई,
वीडियो कहां की है नहीं पता लेकिन इस बहन को सेल्यूट है जो बड़ी बहादुरी के साथ कुछ सेकंड के टाइम में बच्चे की जान बचा ली😱 pic.twitter.com/fCRA7Sv6dk
— Adv.Nazneen Akhtar (@NazneenAkhtar23) June 5, 2025
இந்த சம்பவத்துக்குப் பிறகு, கேபின் காரின் ஓட்டுநர் மிகவும் வருந்தி, உணவக உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக உறுதி கூறியுள்ளார்.
சிறுமியின் நேர்த்தியான செயல் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளதோடு, “சிறுமி வீரத்துடன் தங்கை உயிரைக் காப்பாற்றினார்” என பலர் புகழ்ந்து வருகின்றனர்.