
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோவிலில் நேற்று மாலை திருவிழா நடந்தது. அப்போது கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகளுக்கு நெற்றி பட்டம் கட்டி ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த நிலையில் சுவாமி விதி உலாவில் பட்டாசுகள் வெடித்த போது வளர்ப்பு யானைகளான கோகுலும், பீதாம்பரமும் பயங்கரமாக மோதி கொண்டது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பாகன்கள் யானையை கட்டுப்படுத்த முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.
இந்நிலையில் யானைகள் மோதி கொண்டதால் கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் யானைகளுக்கு இடையே சிக்கி ஷீலா(65), அம்மு குட்டியம்மா(70) ராஜன் ஆகிய மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
கோவில் திருவிழாவில் மோதிக்கொண்ட யானைகள்… 3 பேர் பலி! pic.twitter.com/3QkwR6dkSj
— Dina Maalai (@DinaMaalai) February 13, 2025