
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில், பயிற்சி பெற வந்த 54 வன துணை ஆய்வாளர்கள் (Sub-Inspectors) மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் ரேஞ்சைச் சேர்ந்த பயிற்சி குழுவினர், ஜாரிநகர் பகுதியில் உள்ள வன நர்சரியை செவ்வாய்க்கிழமை காலை பார்வையிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு பறவைவை தேன் கூட்டை சீண்டியதால் தேனீக்கள் ஆக்ரோஷத்தில அங்கு இருந்த பயிற்சி ஆய்வாளர்களை கொட்ட தொடங்கியது.
இந்த தாக்குதலில் 54 காவலர்கள் பாதிக்கப்பட்டனர், 16 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அனைத்து காயமடைந்தவர்களும் முதலில் சமூக சுகாதார மையத்துக்கு (CHC) கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தாக்குதல் நடந்த நேரத்தில், கிராம மக்கள் மற்றும் நர்சரியில் பணியாற்றும் ஊழியர்கள் போர்வைகள் மற்றும் தீயின் உதவியுடன் தேனீக்களை விரட்ட முயன்றனர். சம்பவத்தையடுத்து, தலைமை வனப் பாதுகாவலர் அரவிந்த் ராஜ் மிஸ்ரா நேரில் சென்று சிகிச்சை பெறும் அதிகாரிகளின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.