
சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு மலையம்பாக்கத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ்குமாருக்கு பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக பாக்கியலட்சுமி தனது தாய் வீட்டில் இருந்தார். சதீஷ்குமாரும் மாமியார் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தாய் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சதீஷ்குமார் மலையம்பாக்கத்திற்கு வந்துள்ளார்.
அங்கு கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடியுள்ளனர். மேலும் சதீஷ் தனது மனைவியை வீடியோ கால் மூலம் அழைத்து திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது திடீரென சதீஷ்குமார் தனக்கு மயக்கம் வருவதாக கூறி அறைக்கு சென்றார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.