உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. மத்திய சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இருக்கும் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வந்து செல்கிறார்கள். அதன்படி தாஜ்மஹாலுக்கு வருகை தரும் இந்திய பார்வையாளர்கள் நபருக்கு 50 முதல் வெளிநாட்டினர் ஒரு நபருக்கு 1100 ரூபாய் வரை செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் வருடத்தில் ஒரு சில குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் மக்கள் தாஜ்மஹாலை இலவசமாக பார்வையிடலாம்.

அதன்படி ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை ஷாஜகான் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த மூன்று நாட்களில் தாஜ்மஹாலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த வருடம் பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை தாஜ்மஹால் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.