தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து  வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு அவர் சென்றபோது வரிசையாக தமிழக வெற்றி கழகத் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதோடு தமிழக வெற்றிக்கழகத்தின் கொத்தடிமைகள். நடு ரோட்டில் புஸ்ஸி காலில் வரிசையாக விழுறாங்க. அவரும் அதை ரசிக்கிறார். இந்த லட்சணத்தில் மத்தவங்களை கொத்தடிமைன்னு கமெண்ட் பண்ணி நொட்டிட்டு இருக்காங்க என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.