பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கி அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். மேலும் தனது கட்சியை முறையாக பதிவு செய்து கட்சிக்கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்துள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி வி சாலையில் இன்று நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைவர்களின் கட்டவுட்டில் தொடங்கி பிரம்மாண்டமான மேடை, பல்லாயிரம் பேர் அமரும் இடம் , உணவு வழங்கும் இடம் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவர்கள் என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

இந்த மாநாட்டில் நடிகர் விஜய் 2 மணி நேரம் பேச இருக்கின்ற நிலையில் அதனை காண ஏராளமான ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாநாடு 4 மணி அளவில் தொடங்க உள்ளது. ஆனால் இப்பவே தொண்டர்கள் மாநாட்டு தொடருக்கு வர ஆரம்பித்தனர். 10 மணிக்கு தான் மாநாடு திடல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் உடனே அனுமதி வழங்கப்பட்டது.