இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் தவறுதலாக வேறு வங்கிக் கணக்குக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் அனுப்பும் பணம் தவறுதலாக வேறொரு கணக்கிற்கு சென்று விட்டால் 24 மணி நேரத்தில் அந்த பணத்தை திரும்ப பெறலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கு முதலில் upi மூலமாக பணம் அனுப்பும்போது தவறான கணக்குக்கு பணத்தை அனுப்பி விட்டால் உடனே உங்களுக்கு பரிவர்த்தனை குறித்து வரும் எஸ் எம் எஸ் ஐ சேமிக்க வேண்டும். இதன் மூலம் பரிவர்த்தனை உறுதி செய்யப்படுவதன் பிபிஎல் எண் இருக்கும். பணத்தை திரும்ப பெறுவதற்கு இது கண்டிப்பாக தேவைப்படும்.

நீங்கள் தவறுதலாக வேறொரு நபருக்கு பணத்தை அனுப்பி விட்டால் உடனே bankingombudsman.rbi.org.in
என்ற இணையதளத்திற்கு சென்று இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும்.

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஹெல்ப்லைன் எண்கள் மூலமும் புகார் அளிக்கலாம். ஹெல்ப்லைன் என்னை அழைத்து தவறான பரிவர்த்தனை தொடர்பாக முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

அதனைப் போலவே வங்கியின் கிழக்கு நேரில் சென்று மேலாளர் இடம் இது குறித்து புகார் அளிக்கலாம்.

மேற்கண்ட வழிமுறைகளை செய்தால் தவறான வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்ட இரண்டு நாட்களில் உங்களுக்கு திருப்பி வந்து விடும்.