
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் இந்திய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை இந்தியாவின் பாதுகாப்பு படை அமைப்புகள் தகர்த்து எறிந்தது. நேற்று மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது, இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும் தொழில் முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விளக்கம் அளிக்கப்படும். ஊடகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை நம்புவதையும், பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.