‘லியோ’ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்தனர். அதன்படி அவ்வப்போது ஒருசில அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருந்தது. இந்நிலையில்  தளபதி 68வது படத்தின், புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த 2ம் தேதி படம் பூஜையுடன் தொடங்கிய நிலையில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்நிலையில், அந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் இயக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.