தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இயக்குனர் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி ஆகியோரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

அதன் பிறகு சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தில் பகத் பாஸில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் கேமியோ ரோலிங் நடிக்க இருப்பதாக புது தகவல் வெளிவந்துள்ளது. அதோடு கைதி படத்தில் இடம்பெற்ற டில்லி மற்றும் விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரங்களும் தளபதி 67 திரைப்படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு  தளபதி 67 படத்தில் சீயான் விக்ரமும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பிரபல நடிகர் சந்தீப் கிஷன் தளபதி 67 படம் குறித்து சொன்ன அப்டேட் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தளபதி 67 ப்ரோமோ பயங்கரமாக இருக்கும் என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.