தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதன் பிறகு நடிகர் அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் தளபதி 67 படப்பிடிப்புக்காக இன்று பட குழு காஷ்மீர் சென்ற நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் ஒரு வரி கதை இதுதான் என்று இணையதளத்தில் தற்போது ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் விஜய் ஒரு சாதாரண மனிதராக இருக்கும் நிலையில் சில பல காரணங்களால் எப்படி அசாதாரணமான மனிதராக மாறி ஒரு கேங்ஸ்டராக உருவாகிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை என்று தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருப்பதால் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.