தளபதி விஜய் நடிகராக மட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி மக்களுக்காக பணம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.  அந்தவகையில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய். இதே செயலை 19 ஆண்டுகளுக்கு முன்பே செய்து அசத்தியுள்ளார் அஜித்.

2004ல் திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் 1000 மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நடிகர் அஜித் சந்தித்து கவுரவித்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது