தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கதிர் உட்பட பலர் நடிக்கின்றனர். லியோ படத்தில் மிஷ்கின், சஞ்சய்தத் இருவரும் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. லியோ படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் 2 மாதங்கள் நடந்தது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் 68-வது படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இயக்க இருப்பதாகவும், வெங்கட்பிரபு இயக்கினால் யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைப்பார் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.