தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்தநாளான நேற்று தீனா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படம் 23 வருடங்களுக்கு பிறகு நேற்று டிஜிட்டலில் ரீ ரிலீஸ் ஆனது. இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள காசி தியேட்டரில் தீனா படம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கில்லி படத்தின் பேனரை அஜித் ரசிகர் ஒருவர் கிழித்தெறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கில்லி படத்தின் பேனர் கிளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பேனரை கிழித்த எபினேஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.