பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் கல்வி நிலையங்களில் தனியார் டேங்கர் லாரிகளுக்கு மாறி மாறி போன் செய்து தண்ணீருக்கு ஆர்டர் செய்து வருகிறார்கள் .

தற்போதைய சூழலில் ஆர்டர் செய்தால் ஒரு வாரம் கழித்து தான் தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் WFH-க்கு அனுமதிக்க வேண்டும் என்று ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.