தமிழ் சினிமாவில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்தான் ரித்திகா சிங். தற்போது இவர் ரஜினி நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் படப்பிடிப்பின் போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் நான் ஊசி போடுவதற்காக படப்பிடிப்பு தளத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்கிறேன் விரைவில் இது சரியாகிவிடும் என அவர் கூறியுள்ளார்.