மதியம் 2:30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராகவுள்ளார். 

நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மதியம் 2: 30 மணிக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராகவுள்ளார். முன்ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கி விட்டேன், தலைமறைவு ஆகும் ஆள் நான் இல்லை. உடல் நிலையும் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு செல்வதாக நடிகர் மன்சூர் அலிகான் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் நாளை ஆஜராக கூறி இருந்த நிலையில் இன்று ஆஜராகாவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இருமல் பாதிப்பால் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி கடிதம் எழுதி இருந்த நிலையில் இன்று ஆஜராக உள்ளார்.

முன்னதாக திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனுவை வாபஸ் பெற்றார் மன்சூர் அலிகான். முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெற்றுள்ளது. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதில் நுங்கம்பாக்கம் என தவறுதலாக குறிப்பிட்டதால் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கண்டித்தார். சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.